இந்தியா
சித்து மூஸ்வாலா

சித்து மூஸ்வாலா படுகொலை எதிரொலி - 434 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கிறது பஞ்சாப் அரசு

Published On 2022-06-03 06:32 IST   |   Update On 2022-06-03 06:41:00 IST
ஆம் ஆத்மியின் மலிவான அரசியல் காரணமாக பஞ்சாப் மக்கள் ஒரு மகத்தான பாடகரை இழந்து விட்டனர் என பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் தெரிவித்தார்.
சண்டிகர்:

பஞ்சாப் மாநில அரசு சிக்கன நடவடிக்கையாக காங்கிரசைச் சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலா உள்பட 434 முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை சமீபத்தில் நீக்கியது. பாதுகாப்பு நீக்கப்பட்ட அடுத்த தினத்தில் பாடகர் சித்து மூஸ்வாலா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், மீண்டும் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. வரும் 7-ம் தேதி முதல் 434 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News