இந்தியா
பாடகர் சித்து முஸ்வாலா

பிரபல பஞ்சாபி பாடகர் சுட்டுக் கொலை - பாதுகாப்பை விலக்கிய மறுநாளில் நடந்த பயங்கரம்

Published On 2022-05-29 13:38 GMT   |   Update On 2022-05-29 13:38 GMT
பாடகர் சித்து மூஸ்வாலாவுக்கு அரசு வழங்கிய பாதுகாப்பு நேற்று வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் பிரபல பாடகராக இருந்து வருபவர் சித்து மூஸ்வாலா. காங்கிரஸ் கட்சியில் கடந்த டிசம்பர் மாதம் இணைந்தார்.

இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது சித்து மூஸ்வாலா மர்ம கும்பலால் சுடப்பட்டார். இதில் அவரும், அவருடன் இருந்த 3பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியில் சித்து மூஸ்வாலா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பட்டப் பகலில் பிரபல பாடகர் சுட்டுக் கொல்லப்பட்டது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News