இந்தியா
கார்த்தி சிதம்பரம்

விசா முறைகேடு விவகாரம்- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு

Published On 2022-05-25 08:33 GMT   |   Update On 2022-05-25 08:33 GMT
விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில்தான் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
புதுடெல்லி:

சீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக விசா வழங்குவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பாக சென்னை, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.ஐ. சோதனையும் நடத்தியது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசா முறைகேடு விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்து உள்ளார்.

இந்தநிலையில் விசா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை இன்று வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்த கட்டமாக அவர் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பவும் திட்டமிட்டு உள்ளது.

விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில்தான் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.

Tags:    

Similar News