இந்தியா
விபத்து

மத்திய பிரதேசத்தில் திருமண கோஷ்டியினர் மீது லாரி மோதி 3 பேர் பலி

Update: 2022-05-17 06:47 GMT
திருமணத்துக்காக பல்வேறு பொருட்களை கொண்டு வந்த லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற மோட்டர் சைக்கிள்கள், திருமண கோஷ்டியினர் மீது மோதியது.
கந்த்வா:

மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டம் முண்டிபீடு சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று இரவு நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் புறப்பட்டனர். அவர்கள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திருமணத்துக்காக பல்வேறு பொருட்களை கொண்டு வந்த லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற மோட்டர் சைக்கிள்கள், திருமண கோஷ்டியினர் மீது மோதியது.

இதில் 5 வயது குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News