இந்தியா
பெட்ரோல் பங்க்

கவுகாத்தியில் 24 மணி நேரத்திற்கு பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தம்

Published On 2022-05-13 16:18 IST   |   Update On 2022-05-13 16:18:00 IST
எண்ணெய் நிறுவனம் போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து சட்ட விரோதமான வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்வதாக இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.
கவுகாத்தி:

அசாம் தலைநகர் கவுகாத்தியில் வடகிழக்கு இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கம் சார்பில் இன்று காலை முதல் 24 மணி நேரத்திற்கு வேலை நிறுத்தப் போராட்டம் (பந்த்) நடைபெறுகிறது. 

எண்ணெய் நிறுவனம், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் மஸ்தூர் யூனியனுடன் இணைந்து சட்ட விரோதமான வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்வதாக வடகிழக்கு இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கம் குற்றம் சாட்டி, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனால் கவுகாத்தியில் இன்று பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டிருந்தன.

Similar News