இந்தியா
குழந்தைகளுக்கான படுக்கை வசதி

குழந்தைகளுடன் சிரமமின்றி பயணிக்க 'பேபி பெர்த்' வசதி- ரெயில்வே அறிமுகம்

Published On 2022-05-11 12:18 GMT   |   Update On 2022-05-11 12:18 GMT
இந்த வசதி அன்னையர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரெயில்வேயின் டெல்லி பிரிவில் பெண்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 9-ம் தேதி முதல் லக்னோ மெயிலில் அறிமுகமாகியுள்ளது.
குழந்தைகளுடன் பெண்கள் இனி எளிதாக பயணம் செய்யும் வகையில், ரெயில்களில் குழந்தைகளுக்கு படுக்கை வசதியை ரெயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது.

ரெயில் பயணங்களை பயணிகளுக்கு வசதியாக மாற்றும் வகையில், வடக்கு ரெயில்வே குழந்தைகளுக்கான படுக்கை வசதியை (பேபி பெர்த்) சேதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதி அன்னையர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரெயில்வேயின் டெல்லி பிரிவில் பெண்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 9-ம் தேதி முதல் லக்னோ மெயிலில் அறிமுகமாகியுள்ளது.

இதுகுறித்து லக்னோ வடக்கு ரெயில்வேயின் கோட்ட ரெயில்வே மேலாளர் சதீஷ் குமார் தனது டுவிட்டரில், லக்னோ மெயிலில் கோச் எண் 194129/பி4, பெர்த் எண் 12 & 60-ல் குழந்தைகளுக்கான படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பேபி பெர்த்துகள் மடிக்கக்கூடியவை ஆகவும் மற்றும் குழந்தைகள் விழாமல் இருக்க ஒரு ஸ்டாப்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இது கைக்குழந்தைகளுக்கான கூடுதல் சிறிய படுக்கையாக செயல்படுகிறது. இது ரெயில்களில் கீழ் பெர்த்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சியில், இதற்கான முன்பதிவு செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. புயலாக வலுவிழந்தது அசானி- ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த மழை
Tags:    

Similar News