இந்தியா
இந்தியாவின் துணை பிரதிநிதி ரவீந்திரா காசோலை வழங்கிய காட்சி

ஐ.நா. சபையில் இந்தியை ஊக்குவிக்க 8 லட்சம் டாலர் வழங்கியது இந்தியா

Published On 2022-05-11 17:22 IST   |   Update On 2022-05-11 17:22:00 IST
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புதுடெல்லி:

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்கும் வகையில் 8 லட்சம் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கி உள்ளது. இதற்கான காசோலையை ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி ரவீந்திரா வழங்கினார்.

இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுத் தகவல் துறையுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகெங்கும் உள்ள இந்தி பேசும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும்  2018-ஆம் ஆண்டு ஐ.நா. திட்டம் தொடங்கப்பட்டது.  

இந்தியில் செய்திகள் மற்றும் மல்டிமீடியா உள்ளடக்கத்தை ஒருங்கிணைக்க கூடுதல் நிதி வழங்கி, 2018-ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் உலகளாவிய தகவல் தொடர்புத் துறையுடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது. ஐ.நா.வின் இணையதளம், சமூக வலைத்தளங்கள் மற்றும்  ஐ.நா. முகநூல் இந்திப் பக்கம் மூலம் ஐ.நா. தொடர்பான செய்திகள் இந்தியில் வெளியிடப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News