இந்தியா
பாகிஸ்தான் கல்லூரி மாணவிகள்

பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால் செல்லாது: இந்தியா அறிவிப்பு

Published On 2022-04-23 08:51 GMT   |   Update On 2022-04-23 08:51 GMT
இதுகுறித்து யூஜிசி மற்றும் ஏஐசிடிஇ அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
புது டெல்லி:

இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகிய அமைப்புகள் எச்சரித்துள்ளன. பாகிஸ்தானில் உயர்கல்வி முடித்துவிட்டு பெறும் பெறும் பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இரு அமைப்புகள் கூறியதாவது:-

இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ பாகிஸ்தானில் மேற்படிப்பு பயின்றால் அவர்களது பட்டம் இந்தியாவில் செல்லாது. அவர்கள் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவும் முடியாது. இருப்பினும், பாகிஸ்தானில் உயர்கல்வி பயின்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் சான்றிதழ் அங்கீகரிக்கப்படும். அவர்களுக்கு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வாங்கிய பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News