இந்தியா
மத்திய அரசு

12 முதல் 17 வயதுடையவர்களுக்கு செலுத்த மேலும் ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

Published On 2022-03-23 06:07 GMT   |   Update On 2022-03-23 06:07 GMT
தடுப்பூசி தேவை அதிகரிப்பதால் மேலும் சில தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் பயன் பாட்டில் உள்ளன.

தடுப்பூசி தேவை அதிகரிப்பதால் மேலும் சில தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.

12 முதல் 17 வயதுக்குட் பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வயதில் உள்ளவர்களுக்கு நோவாவேக்ஸ் தடுப்பூசி பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.


அவசர கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கி உள்ளது. வெளிநாட்டில் கண்டுபிடித்த இந்த தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரித்து வினியோகம் செய்யும்உரிமையை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் பெற்று இருக்கிறது.

நோவாவேக்ஸ் தடுப்பூசி பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டது. 12 முதல் 17 வயதுக்குட்டவர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் 80 சதவீதம் வெற்றி கிடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... புதினுடன் நேரடியாக பேச தயார்: உக்ரைன் அதிபர்

Tags:    

Similar News