இந்தியா
தெலுங்கானா அரசு

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு நிதி- தெலுங்கானா அரசு

Published On 2022-03-15 10:19 GMT   |   Update On 2022-03-15 12:26 GMT
உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில் சிக்கியிருந்த ஏராளமான மருத்துவ மாணவர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மத்திய அரசு மீட்டது.
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 19-வது நாளாக உக்ரைன் மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் உக்ரைனை ரஷிய படைகள் தாக்கி நிர்மூலமாக்கி உள்ளது. மேலும், தொடர்ந்து தினமும் குண்டுகளை வீசி உக்ரைன் நாட்டை சின்னாபின்னப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில் சிக்கியிருந்த ஏராளமான மருத்துவ மாணவர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மத்திய அரசு மீட்டது. இதன் மூலம், 18000க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கப்பட்டதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், மருத்துவம் படிக்க உக்ரைன் சென்று நாடு திரும்பியுள்ள தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்களின் படிப்புக்கான நிதி வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்.. ரஷியா மீது சர்வதேச கோர்ட்டு நாளை இடைகால உத்தரவு விதிக்கிறது
Tags:    

Similar News