இந்தியா
கனக துர்கையம்மன் கோவிலில் நடிகை ரோஜா இன்று சாமி தரிசனம் செய்த காட்சி

ஆந்திராவில் நடிகை ரோஜா அமைச்சராக வாய்ப்பு

Published On 2022-03-12 11:26 IST   |   Update On 2022-03-12 13:52:00 IST
சித்தூர் மாவட்டத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏவான நடிகை ரோஜா அமைச்சராக வாய்ப்பு உள்ளது என ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திருப்பதி:

ஆந்திர மாநில சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி ரூ2.56 லட்சம் கோடியில் 2022-23-ம் ஆண்டுக்கான வருவாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டை வாசித்தார். பட்ஜெட் உரைக்குப் பின்னர் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில்:-

இந்த பட்ஜெட்டால் அனைத்து தரப்பினரும் வளம் பெறுவார்கள்.விரைவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்.

இதில் அமைச்சர் பதவிகள் பறிபோனவர்கள் வருத்தப்படக்கூடாது.அவர்களுக்கு மாநில பொறுப்பு வழங்கப்படும் என தெறிவித்தார். ஜெகன்மோகன் ஆட்சி பொறுப்பேற்றதும் அமைச்சர் பதவி 2½ ஆண்டுகள் மட்டுமே. அதன் பிறகு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனிடையே ஏப்ரல் மாதம் முதல் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமைச்சர் கட்டாயமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சித்தூர் மாவட்டத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏவான நடிகை ரோஜா அமைச்சராக வாய்ப்பு உள்ளது என ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் விஜயவாடாவில் உள்ள கனக துர்கையம்மன் கோவிலில் நடிகை ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.

Similar News