இந்தியா
அஷ்வனிகுமார்

முன்னாள் மந்திரி அஷ்வனிகுமார் காங்கிரசில் இருந்து திடீர் விலகல்

Published On 2022-02-15 14:19 IST   |   Update On 2022-02-15 14:19:00 IST
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் ஆகியோருக்கு நெருக்கமானவர்.
புதுடெல்லி:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மத்திய சட்டத்துறை மந்திரியாக இருந்தவர் அஷ்வனிகுமார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஷ்வனிகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அஷ்வனிகுமார் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

46 ஆண்டுகால சேவைக்குப் பிறகு நான் கட்சியிலிருந்து விலகுகிறேன். நீண்ட ஆலோசனைக்கு பிறகு தற்போதைய சூழ்நிலையிலும், எனது கண்ணியத்திற்கு ஏற்ப கட்சியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்துள்ளேன். கட்சிக்கு வெளியே, பெரிய அளவில் நாட்டிற்காக என்னால் சேவை செய்யமுடியும் என நம்புகிறேன். இதுவரை எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Similar News