இந்தியா
பஜ்ரங் தள உறுப்பினர்கள்

காதலர் தினத்தன்று இளம் ஜோடிகளை விரட்டியடித்த பஜ்ரங் தள உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு

Published On 2022-02-15 09:09 IST   |   Update On 2022-02-15 09:09:00 IST
ஆக்ராவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற பஜ்ரங் தள உறுப்பினர்கள் கண்ணில் பட்ட இளம் ஜோடிகளை துன்புறுத்தி உள்ளனர்.
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இளம் ஜோடிகள் வெளி இடங்களுக்கு சென்று தங்களின் காதலை பகிர்ந்து கொண்டாடினர்.

இந்நிலையில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்ராவில் நேற்று  பஜ்ரங் தள உறுப்பினர்கள் இளம் ஜோடிககை துன்புறுத்தி விரட்டியடித்து உள்ளனர்.

பஜ்ரங் தள கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் காவி துண்டு அணிந்து பள்ளி சீருடையில் இருந்த பெண்ணிடம் அடையாள அட்டையை காண்பிக்க சொல்லி, பின்னர் அவரது பெற்றோரை வரவழைக்கும்படி மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி உள்ளது. இதேபோல், ஆக்ராவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற பஜ்ரங் தள உறுப்பினர்கள் பூங்கா, ஓட்டல்கள் உள்பட பொது இடங்களில் கண்ணில் பட்ட இளம் ஜோடிகளை துன்புறுத்தி விரட்டியடித்து உள்ளனர்.

இதுகுறித்து பஜ்ரங் தளத்தின் பொறுப்பாளர் அவதார் சிங் கில் கூறுகையில்,  காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இந்தியாவில் தழைத்தோங்கும் மேற்கத்திய கலாச்சாரம். அது இங்கு வளர அனுமதிக்க முடியாது. இந்துத்துவாவைக்  காப்பாற்ற காதலர் தினத்தன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் பொது இடங்களில் பார்க்கும் இளம் ஜோடிகளை கேள்விக் கேட்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து, காதலர் தினத்தன்று பஜ்ரங் தள உறுப்பினர்கள் இளம் ஜோடிகளை துன்புறுத்திய வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்..எல்லைப் போராட்டம் எதிரொலி - 50 ஆண்டுக்கு பின் கனடாவில் அவசரநிலை சட்டம் அமல்

Similar News