இந்தியா
பிரதமர் மோடி

வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும்- பஞ்சாப் மாநிலத்தில் மோடி பிரசாரம்

Published On 2022-02-14 12:10 GMT   |   Update On 2022-02-14 12:10 GMT
பஞ்சாப் மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக சாத்தியமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
ஜலந்தர்:

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக நேரடியாக பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

பஞ்சாப் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மாநிலத்தில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும்.  மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக சாத்தியமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என உறுதியளிக்கிறேன். 



காங்கிரஸ் கொள்கைகள் பஞ்சாப் மாநிலத்தில் தொழில்களை அழித்துவிட்டது, வேலைவாய்ப்பை பாதித்துள்ளது. தங்களுக்குள் சண்டை போடுபவர்கள் நிலையான அரசாங்கத்தை தருவார்களா? 

இவ்வாறு அவர் பேசினார்.

117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுக்தேவ் சிங் திண்ட்சாவின்  சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. 
Tags:    

Similar News