இந்தியா
ஓட்டு செலுத்தும் வாக்காளர்

உத்தரகாண்ட், கோவா தேர்தல் - 1 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியீடு

Published On 2022-02-14 13:57 IST   |   Update On 2022-02-14 13:57:00 IST
உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.
லக்னோ:

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், காலை 9 மணி நிலவரப்படி கோவாவில் 11.04 சதவீத வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி கோவாவில் 26.63 சதவீத வாக்குகளும் பதிவாகின.

உத்தர பிரதேசத்தில்காலை 9 மணியளவில் 9.45 சதவீத வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 23.03 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இதேபோல், உத்தரகாண்டில் காலை 9 மணிக்கு 5.15 சதவீத வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி உத்தரகாண்டில் 18.97 சதவீத வாக்குகளும் பதிவானது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பகல்  1 மணி நிலவரப்படி கோவாவில் 44.63 சதவீத வாக்குகளும், உத்தரகாண்டில் 35.21 சதவீத வாக்குகளும், உத்தர பிரதேசத்தில் 39.07 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Similar News