இந்தியா
லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின்
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரியில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி பா.ஜ.க.-வினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்ததையடுத்து இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக உத்தர பிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, லக்னோ நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு ஜாமின் வழங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவின் ஆடியோ பதிவு குறித்து சி.பி.ஐ. விசாரணை