இந்தியா
பசவராஜ் பொம்மை

நதிகள் இணைப்பு விவகாரத்தில் கர்நாடகா தனது உரிமையை விட்டுக் கொடுக்காது - பசவராஜ் பொம்மை

Published On 2022-02-07 16:18 IST   |   Update On 2022-02-07 17:37:00 IST
கர்நாடகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தும் வகையிலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது.
புதுடெல்லி:

கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு  மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது.

கர்நாடக மந்திரிசபையை மாற்றிவிட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க முதல் மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவேண்டும் என மூத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் பசவராஜ் பொம்மைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே, கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் பற்றி ஆலோசிப்பதற்காக பசவராஜ் பொம்மை இன்று டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், நதிகள் இணைப்பு விவகாரத்தில் காவிரி நதியும் இருப்பதால் கர்நாடகா எப்போதும் தனது உரிமையை விட்டுக் கொடுக்காது என தெரிவித்தார்.

Similar News