இந்தியா
லதா மங்கேஷ்கரின் மணல் சிற்பம்

மணற்சிற்பம் உருவாக்கி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

Published On 2022-02-06 22:11 IST   |   Update On 2022-02-06 22:11:00 IST
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
புவனேஷ்வர்:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92), சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு  மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புரி கடற்கரையில் லதா மங்கேஷ்கர் உருவத்தை மணற்சிற்பமாக உருவாக்கியுள்ளார். அந்த சிற்பத்தில் இந்திய நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி என இரங்கல் தெரிவித்துள்ளார்.

Similar News