இந்தியா
பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
லதா மங்கேஷ்கர் மறைவை அடுத்து தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு இரு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
மும்பை:
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் (92), இன்று காலை காலமானார்.
கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கர் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்...லதா மங்கேஷ்கர் பாடிய தமிழ் பாடல்கள்