இந்தியா
ரேசன் கடை

போலி ரேசன் கார்டுகளில் உத்தர பிரதேசம் முதலிடம்- மத்திய அரசு தகவல்

Published On 2022-02-04 13:59 GMT   |   Update On 2022-02-04 13:59 GMT
இந்தியாவில் அதிக அளவில் போலி ரேசன் அட்டைகள் வைத்திருந்த மாநிலங்கள் பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் ஒருவர் வெவ்வேறு இடங்களில் ரேசன் அட்டைகள் வைத்திருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நுகர்வோர் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் போலியான மற்றும் தகுதியற்ற ரேசன் அட்டைதாரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நாடு முழுவதும் தகுதியற்ற 4 கோடியே 28 லட்சத்து 1585 ரேசன் அட்டை கணக்குகள் நீக்கப்பட்டதாகவும்,  அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 1 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரத்து 301 ரேசன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தமிழகத்தைப் பொருத்தவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 140 தகுதியற்ற ரேசன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.
Tags:    

Similar News