இந்தியா
மத்திய மந்திரி கபில் பட்டீல், பிரதமர் மோடி

வெங்காயம், தக்காளி விலையை குறைப்பதற்காக மோடி பிரதமர் ஆகவில்லை- மத்திய மந்திரி

Published On 2022-01-31 16:42 IST   |   Update On 2022-01-31 16:42:00 IST
மட்டன் இறைச்சியை ரூ.700 கொடுத்து வாங்கும் மக்கள், ரூ.10-க்கு விற்கும் வெங்காயத்தை பெரிதாக பேசுகிறார்கள் என கூறினார்.
தானே:

தக்காளி, வெங்காயம் விலையை குறைக்க மோடி பிரதமர் ஆகவில்லை என மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரி கபில் பட்டீல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தானேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:- 

2024-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் மீண்டும் சேரும். பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவால் மட்டுமே இதை சாதிக்க முடியும். பிரதமர் மோடி குடியுரிமை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற துணிச்சலான முடிவுகளை எடுத்து நம் நாட்டை வழி நடத்துகிறார்.

அதேபோல விலைவாசி உயர்வுக்கு பிரதமர் மோடியை குறை கூறுகின்றனர். மக்கள், மட்டன் இறைச்சியை ரூ.700 கொடுத்து வாங்குகிறார்கள். பீட்சாவை ரூ.500 கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால் வெங்காயம் ரூ.10-க்கும், தக்காளி ரூ.40-க்கும் கிடைக்கும் போது விலை உயர்வதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

வெங்காயம் விலையையும், உருளைக்கிழங்கு விலையையும் குறைப்பதற்காக அவர் பிரதமர் ஆகவில்லை. இந்த விலை உயர்வுக்கான காரணத்தை புரிந்து கொண்டவர்கள் பிரதமர் மோடியை குறைகூற மாட்டார்கள். 

அவர் தொடர்ந்து நாட்டை ஆள வேண்டும். 

இவ்வாறு கபில் பட்டீல் பேசினார்.

Similar News