இந்தியா
பிரதமர் மோடி

வருங்காலங்களில் இந்தியா, இஸ்ரேல் நட்புறவு புதிய மைல்கற்களை எட்டும் - பிரதமர் மோடி

Published On 2022-01-30 01:26 IST   |   Update On 2022-01-30 01:26:00 IST
இந்தியா, இஸ்ரேல் இடையிலான 30 ஆண்டுகால உறவை குறிக்கும் விதமாக மும்பை இந்தியா கேட் பகுதியில், இரு நாடுகளின் தேசியக் கொடிகளும் ஒளிமயமாக காட்சிப்படுத்தப்பட்டன.
புதுடெல்லி:

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இந்நிலையில், இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், நமது நாடுகளுக்கிடையேயான உறவின் வரலாறு மிகவும் பழமையானது. பல நூற்றாண்டுகளாக இந்தியா மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு இடையே வலுவான உறவு உள்ளது. இன்று உலகம் முக்கியமான மாற்றங்களைக் காணும்போது, இந்தியா-இஸ்ரேல் உறவுகளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. வருங்காலங்களில் இந்தியா-இஸ்ரேல் நட்புறவு பரஸ்பர ஒத்துழைப்பில் புதிய மைல்கற்களை எட்டும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இஸ்ரேலுடனான 30 ஆண்டுகால உறவை சிறப்பிக்கும் விதமாக, பிரதமர் மோடி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News