செய்திகள்
பாஜகவினர் வெற்றிக் கொண்டாட்டம்

திரிபுரா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி- தொண்டர்கள் உற்சாகம்

Published On 2021-11-28 13:44 GMT   |   Update On 2021-11-28 13:44 GMT
51 உறுப்பினர்கள் கொண்ட அகர்தலா மாநகராட்சியில் எதிர்க்கட்சிகள் எந்த வார்டிலும் வெற்றி பெறவில்லை. அனைத்து வார்டுகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அகர்தலா:

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் கடந்த 25 ஆம் தேதி  உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அகர்தலா மாநகராட்சி மற்றும் 13 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  இதில் பதிவான வாக்குகள்  இன்று எண்ணப்பட்டன.

இதில்,  பா.ஜ.க.  அமோக வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

மொத்தம் உள்ள 334 இடங்களில் பாஜக 329 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதேபோல் அகர்தலா மாநகராட்சியையும் பாஜக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 51 உறுப்பினர்கள் கொண்ட அகர்தலா மாநகராட்சியில் எதிர்க்கட்சிகள் எந்த வார்டிலும் வெற்றி பெறவில்லை. அனைத்து வார்டுகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.


கோவாய் நகராட்சி, பெலோனியா நகராட்சி, குமார்காட் நகராட்சி மற்றும் சப்ரூம் நகர பஞ்சாயத்துகளிலும் பாஜக அனைத்து வார்டுகளையும் கைப்பற்றியது. 25 வார்டுகள் கொண்ட தர்மாநகர் நகராட்சி, 15 வார்டுகள் கொண்ட தெளியமுரா நகராட்சி, 13 வார்டுகள் கொண்ட அமர்பூர்ந கர் பஞ்சாயத்தையும் பாஜக முழுமையாக கைப்பற்றியது. இந்த வெற்றியை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Tags:    

Similar News