செய்திகள்
குணால் கோஷ்

திரிபுரா உள்ளாட்சி தேர்தல் முடிவு 2023 சட்டசபை தேர்தலுக்கு அடித்தளம்: திரிணாமுல் காங்கிரஸ்

Published On 2021-11-28 10:20 GMT   |   Update On 2021-11-28 10:20 GMT
திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை பின்னுக்குத் தள்ளி திரிணாமுல் காங்கிரஸ் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்திய மம்தா பானர்ஜி பல்வேறு மாநிலங்களில் பா.ஜனதாவை எதிர்த்து தேசிய அளவில் பா.ஜனதாவை எதிர்க்கும் ஒரே கட்சி திரிணாமுல் என்ற பிம்பத்தை உருவாக்க  முடிவு செய்துள்ளார். அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளார்.

கோவா மாநிலத்தில் பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். அதேபோல் வடகிழக்கு மாநிலங்களிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்கு முன்னோட்டமாக திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனவை எதிர்த்து களம் இறங்கினார். திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பா.ஜனதா கடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தது.

சில நாட்களுக்கு முன் திரிபுராவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பெரும்பலான இடங்களில் பா.ஜனதா முன்னணி பெற்ற நிலையில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவு, 2023 சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை காட்டுகிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குணால் கோஷ் கூறுகையில் ‘‘2023 எங்களுடையது. இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவு 2023-ல் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு அடித்தளமிட்டுள்ளது. நாங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்தான் கால் பதித்தோம். அதற்குள் பல இடங்களில் 2-வது இடத்தை பிடித்துள்ளோம். பா.ஜனதா பல இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் நாங்கள் வாக்குகள் பெற்றுள்ளோம்’’ என்றார்.
Tags:    

Similar News