செய்திகள்
பாம்பை பிடித்து செல்லும் பசவராஜ் பூஜாரி

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

Published On 2021-11-28 01:51 GMT   |   Update On 2021-11-28 01:51 GMT
300க்கும் மேற்பட்ட பாம்புகளிடம் இருந்து மக்களை காத்த பாம்பு பிடி நிபுணர், மதுபோதையில் பாம்பை பிடித்த‌தால் பாம்பு கடித்து, பாம்புடனே உயிர்விட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தின் கோடிஹாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி. பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுள்ளார். 

இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தின் ஒரு வீட்டில் சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்ததை கிராம மக்கள் பசவராஜிடம் தெரிவித்துள்ளனர். மது போதையில் இருந்த அவர் வழக்கம்போல லாவகமாக பாம்பை பிடித்தாலும் அதை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விடுவதில் அலட்சியம் காட்டியுள்ளார். 

பாம்பை பையில் அடைக்காமல் கையிலே அவர் தூக்கிச்சென்றபோது சுமார் 5 முறை பாம்பு அவரை கடித்த‌தாக தெரிகிறது. இதனால் விஷம் தலைக்கேறிய நிலையில், அவர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பாம்பை விடாமல் கட்டியாக பிடித்துக்கொண்டவாறே அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 
Tags:    

Similar News