செய்திகள்
பசவராஜ் பொம்மை

நாம் நவீன உலகை நோக்கி செல்ல வேண்டும்: பசவராஜ் பொம்மை

Published On 2021-11-26 03:19 GMT   |   Update On 2021-11-26 03:19 GMT
மகான்களின் தியாகத்தை அடிப்படையாக கொண்டு, நாம் நவீன உலகத்தை நோக்கி செல்ல வேண்டும். நாம் அவ்வாறு செல்லும்போது, நமது பழமையை மறக்கக்கூடாது.
பெங்களூரு :

உலக புத்த மத சங்கம் மற்றும் நாகசேனா புத்த விஹார் ஆகியவை சார்பில் 72-வது அரசியல் அமைப்பு சட்ட தினத்தையொட்டி தேசிய புத்த மத மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

புத்தர் எனக்கு பிடித்தமானவர். புத்தர், பசவண்ணர், அம்பேத்கர், மகாவீர் போன்றவர்கள் பெரிய சாதனையாளர்கள். காலம் அவர்களை அழைத்து சென்றுவிட்டது. அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் புத்தர் சிலையை நிறுவியுள்ளன. அமைதி, சாதனை மிக முக்கியம். தியாக வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துள்ளனர்.

அத்தகைய மகான்களின் தியாகத்தை அடிப்படையாக கொண்டு, நாம் நவீன உலகத்தை நோக்கி செல்ல வேண்டும். நாம் அவ்வாறு செல்லும்போது, நமது பழமையை மறக்கக்கூடாது. அரசியல் சாசனத்தை பாதுகாப்போம். வாழ்க்கையை கட்டமைப்போம். நாட்டை வளர்ப்போம் என்று சபதம் எடுத்துக்கொள்வோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
Tags:    

Similar News