செய்திகள்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பாஜக செய்த கொடுமையை கண்டு விவசாயிகள் பயப்படவில்லை - மம்தா கருத்து

Published On 2021-11-19 12:57 IST   |   Update On 2021-11-19 12:57:00 IST
3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ள மத்திய அரசின் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தா:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக தெரிவித்த பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பாஜக, உங்களுக்கு செய்த கொடுமையால் துவண்டு போகாமல், இடைவிடாமல் போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இது உங்கள் வெற்றி. இந்த போராட்டத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு அவர் கூறினார்.  

இதையும் படியுங்கள்.. தேர்தல் பயத்தால் வேளாண் சட்டங்கள் வாபஸ்- ப.சிதம்பரம் கருத்து
Tags:    

Similar News