செய்திகள்
பாஜக

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும்- மேலும் ஒரு கருத்துக் கணிப்பில் தகவல்

Published On 2021-11-17 05:26 GMT   |   Update On 2021-11-17 06:53 GMT
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் குறித்து நடத்தப்பட்ட 2-வது கருத்து கணிப்பில் பா.ஜனதா 239 முதல் 245 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 403 தொகுதிகள் உள்ளன.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார் என்பது தொடர்பாக ஏற்கனவே ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் அமைப்பு சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் பா.ஜனதா 213 முதல் 221 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேலும் ஒரு கருத்து கணிப்பில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்-போல்ஸ்ட் ராட் நடத்திய இந்த கருத்து கணிப்பில்
பா.ஜனதா
239 முதல் 245 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த முறை பா.ஜனதா 312 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 119 முதல் 125 இடங்களுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்சி கடந்த தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 28 முதல் 38 இடங்களையே பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.



காங்கிரசுக்கு 5 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News