செய்திகள்
முற்றுகையிட்டவர்களுடன் சித்து பேச்சுவார்த்தை

பஞ்சாப் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி சித்து வீட்டை முற்றுகையிட்ட வேலையில்லா செவிலியர்கள்

Published On 2021-11-15 16:45 GMT   |   Update On 2021-11-15 16:45 GMT
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து வீட்டின் முன், உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்தினர் திடீரென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மேலும், பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக செயல்பட்டதால், அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சில நாட்கள் கழித்து சித்துவும் தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின் சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலிடம் கேட்டுக்கொண்டதால், சித்து ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் உயிரிழந்த அரசு ஊழியரின் குடும்பத்தினர், சில வேலையில்லாத செவிலியர்கள் திடீரென இன்று நவ்ஜோத் சிங் சித்து வீட்டின் முன் திரண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்களை சந்தித்த சித்து, பஞ்சாப் இன்று மிகவும் அதிகமான கடனில் உள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News