செய்திகள்
திருப்பதி கோவில்

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற திருப்பதி கோவில்

Published On 2021-11-14 05:31 GMT   |   Update On 2021-11-14 05:31 GMT
தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் மலைப்பாதை வழியாக திருமலைக்கு வருகின்றன. ஆனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து செல்கின்றனர்.

அவர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள், அறைகள், முடிகாணிக்கை செலுத்தும் இடம், லட்டு கவுண்டர், அன்னதானம் வழங்கும் இடம் உள்ளிட்ட இடங்களை தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும் திருமலையில் சுத்தம், சுகாதாரமாக காணப்படுவதுடன் திருமலையும் பசுமை மாறாமல் உள்ளது.

தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் மலைப்பாதை வழியாக திருமலைக்கு வருகின்றன. ஆனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சார்பில் உலக சாதனை புத்தகத்தில் திருமலைக்கு சிறப்பு இடம் வழங்கியுள்ளது.

இதற்கான சான்றிதழை அந்த நிறுவனத்தை சேர்ந்த தென்னிந்திய தலைவர் சந்தோஷ் சுக்லா சார்பில் தென்னிந்திய ஒன்றிய செயலர் உல்லாஜி தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.

இது திருமலை- திருப்பதி தேவஸ்தானத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News