செய்திகள்
அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவிலுக்கு 115 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்

Published On 2021-09-18 21:55 GMT   |   Update On 2021-09-18 21:55 GMT
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தக் கோவிலின் கட்டுமானப் பணியில் பயன்படுத்துவதற்காக 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் வரவழைக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.,வான விஜய் ஜாலி நடத்தும் டெல்லி கல்வி வட்டம் என்ற அரசுசாரா அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

சிறிய குடுவைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்த நீர், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் டெல்லியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. 

Tags:    

Similar News