செய்திகள்
கோப்புப்படம்

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறைப்பு

Published On 2021-09-18 06:26 GMT   |   Update On 2021-09-18 08:29 GMT
கொரோனா பாதிக்கப்படுபவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிப்பது 7 நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொற்று பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி 14 நாட்கள் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

அதுதவிர கொரோனா பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவமனை ஆவணங்களின் அடிப்படையில் சிகிச்சை காலம் முழுவதும் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான இந்த சிறப்பு சலுகையில் கேரள அரசுமாற்றங்களை செய்துள்ளது. அதன்படி
கொரோனா
பாதிக்கப்படுபவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிப்பது 7 நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. தனிமையில் இருக்கும் காலமும் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் தனிமை முடிந்த  பிறகு நெகட்டிவ் ரிசல்ட் வந்தவர்கள் உடனே அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.

கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு  வைத்திருக்கும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமாகி இருந்தால் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News