செய்திகள்
பாஜகவில் இணைந்த எம்எல்ஏவுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்ட காட்சி

காங்கிரஸ் மீது அதிருப்தி... மத்திய மந்திரி முன்னிலையில் பாஜகவில் இணைந்த எம்எல்ஏ

Update: 2021-09-12 09:43 GMT
பா.ஜ.க. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மற்றவர்களின் உதவியின்றி வாழ்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிவதாக அக்கட்சியில் இணைந்த எம்எல்ஏ ராஜ்குமார் தெரிவித்தார்.
புதுடெல்லி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ராஜ்குமார் இன்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மாநில தலைவர் மதன் கவுசிக் ஆகியோர் முன்னிலையில், ராஜ்குமார் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜ்குமார், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தார். 

பாஜக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மற்றவர்களின் உதவியின்றி வாழ்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது, அதே நேரத்தில் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சி, அந்த மக்களை  மானியங்களைச் சார்ந்திருக்கும் நிலையிலேயே வைத்துள்ளது. உத்தரகாண்டில் பாஜகவின் சிறப்பான பணியை பார்த்து இன்று நான் கட்சியில் சேர்ந்தேன்’ என ராஜ்குமார் கூறினார்.

Tags:    

Similar News