செய்திகள்
கோப்புப்படம்

பேருந்துகள் கொள்முதல் முறைகேடு புகார்: டெல்லி அரசுக்கு எதிராக ஆரம்பகட்ட விசாரணை நடத்த சி.பி.ஐ.-க்கு உள்துறை பரிந்துரை

Published On 2021-08-19 15:23 IST   |   Update On 2021-08-19 15:23:00 IST
டெல்லி போக்குவரத்து நிறுவனத்தால் 1,000 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டியிருந்தது.
டெல்லி போக்குவரத்து நிறுவனத்தால் (டி.டி.சி.) மேற்கொள்ளப்பட்ட பேருந்துகள் கொள்முதல் நடைமுறையில் ஊழல் நிகழ்ந்து இருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டியது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க உத்தரவிடக்கோரி  துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் தா்ணாவில் ஈடுபட்டனா். இந்த ஊழல் விவகாரம் தொடா்பாக விசாரிப்பதற்காக டெல்லி துணைநிலை ஆளுநா் மூன்று உறுப்பினா்கள் கொண்ட குழுவை அமைத்திருந்தாா்.

அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில் டி.டி.சி. மூலம் 1,000 பேருந்துகள் கொள்முதல் விவகாரத்தில் எந்த பலவீனமும் இல்லை என்று தெரிவித்து இருந்தது. எனினும் 1,000 பேருந்துகள் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தில் (ஏ.எம்.சி.) பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

பராமரிப்பு ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதால் அதை ரத்து செய்துவிட்டு புதியதாக ஒப்பந்தப்புள்ளி கோர நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தது.

இந்தநிலையில் தாழ்தள 1000 பேருந்துகள் கொள்முதல் விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் சி.பி.ஐ.-க்கு பரிந்துரை செய்துள்ளது.

Similar News