செய்திகள்
கொரோனா வைரஸ்

உடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்

Published On 2021-05-17 05:01 GMT   |   Update On 2021-05-17 05:01 GMT
பொதுவாக மனிதர்களை தாக்கும் கொடிய வைரஸ்கள் உடம்பில் வேகமாக வளர இந்த பிரச்சனை உடலில் அதிகமாக இருப்பதே காரணம். இது பலருக்கும் தெரியாத உண்மை.
பெங்களூரு :

தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உடல் எடை குறைப்பு சிகிச்சை நிபுணரும், சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவருமான டாக்டர் சீபன், கொடிய வைரசில் இருந்து மனிதர்கள் தங்களை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கையில் கூறியதாவது:-

பொதுவாக மனிதர்களை தாக்கும் கொடிய வைரஸ்கள் உடம்பில் வேகமாக வளர சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதே காரணம். இது பலருக்கும் தெரியாத உண்மை. இதனால் உடலில் சர்க்கரை அளவே கட்டுக்குள் வைத்திருந்தால் வைரஸ் வேகமாக வளருவதை தடுத்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

உடல் கொழுப்பு, வயிற்று கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை வைரஸ் எளிதில் தாக்கும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரியான சதவீத வீட்டு உணவு முறையை கடைப்பிடித்தால் உடல் எடையை குறைத்து விடலாம். இதற்காக வேறு முயற்சிகள் செய்ய தேவை இல்லை.

சர்க்கரை நோயாளிகள் சரியான சதவீத வீட்டு உணவை எடுத்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதிக எடை உள்ளவர்கள் எடையை குறைக்க மிக வேகமாக ஓடினால் மூட்டு தேய்மானம், இருதய பாதிப்பு, மூச்சுத்திணறலால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. வைரசை ஒழிக்க அரசின் விதிமுறைகளையும் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News