செய்திகள்
ராகுல் காந்தி

வரும் நாட்களில் கொரோனாவால் சிக்கல் இன்னும் தீவிரமாகும் - ராகுல் காந்தி

Published On 2021-04-24 23:48 IST   |   Update On 2021-04-24 23:48:00 IST
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள சூழலில், மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

தடுப்பூசி, ஆக்சிஜன் உள்பட இதர சுகாதார சேவைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என நல்லிணக்க அடிப்படையில் கோரிக்கை விடுக்கிறேன்.

விளம்பரங்களுக்கும் இதர தேவையற்ற திட்டங்களில் கவனம் செலுத்துவற்கு பதிலாக மத்திய அரசு இதை செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் கொரோனாவால் சிக்கல் இன்னும் தீவிரமாகும். இதை சமாளிக்க மத்திய அரசு தயாராக வேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவல நிலை தாங்கிக் கொள்ள முடியாதது என பதிவிட்டுள்ளார்.

Similar News