செய்திகள்
சி.டி.ரவி

ராமர் கோவில் நன்கொடை வசூலிப்பதில் குமாரசாமிக்கு மட்டும் சந்தேகம் ஏன்?: சி.டி.ரவி கேள்வி

Published On 2021-02-18 03:14 GMT   |   Update On 2021-02-18 03:14 GMT
ராமர் கோவில் கட்ட ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரும் நன்கொடை கொடுத்துள்ளனர். நன்கொடை விஷயத்தில் அவர்களுக்கு இல்லாத சந்தேகம் நன்கொடை கொடுக்காத குமாரசாமிக்கு மட்டும் எழுவது ஏன்?. என்று சி.டி.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு :

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

ராமர் கோவில் கட்ட ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரும் நன்கொடை கொடுத்துள்ளனர். நன்கொடை விஷயத்தில் அவர்களுக்கு இல்லாத சந்தேகம் நன்கொடை கொடுக்காத குமாரசாமிக்கு மட்டும் எழுவது ஏன்?. தேசிய கோவில் என்பதால் கரசேவகர்கள், தன்னார்வலர்கள், வீடு வீடாக சென்று நன்கொடை வசூலிக்கிறார்கள். அந்த கோவிலில் இந்தியர் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பது அதன் நோக்கம் ஆகும்.

பணம் மட்டுமே எங்களின் குறிக்கோளாக இருந்தால் நாங்கள் வீடு வீடாக சென்று நன்கொடை பெற மாட்டோம். நாட்டின் பெரிய தொழில் அதிபர்களே ராமர் கோவில் கட்ட பணம் கொடுத்திருப்பார்கள். ராமர் கோவில் என்பது தேசிய கோவில். நாட்டில் தற்போது நெருக்கடி இல்லை. ஜனநாயக முறை அமலில் உள்ளது. நீங்கள் (குமாரசாமி) முதல்-மந்திரியாக இருந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டு தான் அந்த நெருக்கடி நிலை இருந்தது.

இவ்வாறு சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News