செய்திகள்
செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் - விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள்

Published On 2021-01-26 14:58 IST   |   Update On 2021-01-26 14:58:00 IST
சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். அப்போது திடீரென டிராக்டருடன் ஒரு குழுவினர் டெல்லிக்குள் நுழைந்தனர். போலீசார் தடுத்தும் எந்த பலனும் இல்லை. 
போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடியும் நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர்.
 
ஆனாலும், செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கு ஏறி போராட்டம் நடத்தினர். தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். அதிகமானோர் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

Similar News