செய்திகள்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

பிரிட்டனில் இருந்து டெல்லி வரும் விமானங்களை உடனே தடை செய்ய வேண்டும் -கெஜ்ரிவால்

Published On 2020-12-21 15:35 IST   |   Update On 2020-12-21 15:35:00 IST
பிரிட்டனில் புதிய வகை வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதால் அங்கிருந்து டெல்லிக்கு வரும் விமானங்களை தடை செய்யும்படி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவிவருகிறது. வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் ஏராளமான நாடுகள் பிரட்டனுக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து டெல்லிக்கு வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்ய வேண்டும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு எச்சரிக்கையுடன் இருப்பதால் மக்கள் பயப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கூறி உள்ளார்.

Similar News