செய்திகள்
வாக்காளர்கள்

பீகார் முதல்கட்ட தேர்தல்- ஒரு மணி வரை 33.10 சதவீத வாக்குப்பதிவு

Published On 2020-10-28 08:26 GMT   |   Update On 2020-10-28 08:26 GMT
பீகார் முதல்கட்ட தேர்தலில் மதிய நிலவரப்படி 33.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 71 தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 1066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

ஊரடங்கு காலத்தில் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், மத்திய சுகாதாரத்துறையின் வழிகாடுதலின்படி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு வழங்க ஏதுவாக சானிடைசர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதன்பின்னர் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறுகிறது. 

வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக சென்று வாக்களித்தவண்ணம் உள்ளனர். அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கை பதிவு செய்தனர். காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. அதன்பின்னர் விறுவிறுப்படைந்தது. மதியம் ஒரு மணி நிலவரப்படி 33.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
Tags:    

Similar News