செய்திகள்
கோப்பு படம்

பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு 1.05 கோடியாக இருக்கும்- அரசு நியமித்த குழு அதிர்ச்சி தகவல்

Published On 2020-10-18 12:09 GMT   |   Update On 2020-10-18 12:09 GMT
இந்தியாவில் வரும் 2021ம் ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.05 கோடியாக இருக்கும் என அரசு நியமித்த குழு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா வைரசின் தீவிர பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கிளைகள் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது.

இந்த குழுவானது வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதன் உச்சம் தொட்டு விட்டது. அனைத்து நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட்டால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரலாம். பாதுகாப்பு முறைகள் தொடர வேண்டும்.

அப்படி அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டால், பிப்ரவரி இறுதிக்குள் குறைந்த கொரோனா பாதிப்புகளுடன் தொற்றானது கட்டுப்படுத்தப்படும்.  கொரோனா தொற்று முடிவடையும் காலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1.05 கோடியாக இருக்கும். இதுவரை 75 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News