செய்திகள்
மழை

கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்

Published On 2020-10-14 14:13 IST   |   Update On 2020-10-14 14:13:00 IST
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 2 நாட்களுக்கு கேரளாவில் கனமழை நீடிக்கும் என்று கூறியுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 2 நாட்களுக்கு கேரளாவில் கனமழை நீடிக்கும் என்று கூறியுள்ளது.

குறிப்பாக திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் மிக கனத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது.

திருவனந்தபுரம் கரமனை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை வெள்ளம் காரணமாக மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

கேரளாவில் பெய்து வரும் மழையால் கடலிலும் சூறைக்காற்று வீசுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாநிலத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Similar News