செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு நாளை மறுநாள் தேர்வு- உச்ச நீதிமன்றம் அனுமதி

Published On 2020-10-12 08:53 GMT   |   Update On 2020-10-12 08:53 GMT
கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் நாளை மறுநாள் தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி  உள்ளது. 

இதற்கிடையில், ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் இன்று தேசிய தேர்வு முகமை, அதிகாரப்பூர்வ வலைத்தளமான ntaneet.nic.in இல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News