செய்திகள்
கொரோனா மீட்பு புள்ளிவிவரம்

கொரோனா மீட்பில் புதிய நம்பிக்கை... 3 வாரங்களாக பாதிப்பை விட குணமடையும் எண்ணிக்கை உயர்வு

Published On 2020-10-09 03:52 GMT   |   Update On 2020-10-09 03:52 GMT
இந்தியாவில் கடந்த 3 வாரங்களாக கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரைவிட குணமடைவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுவரை 69 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 85 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

குறிப்பாக தினசரி புதிய நோய்த்தொற்றுகளைவிட குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக தொடர்ச்சியாக குணமடையும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரத்துடன் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 11 முதல் 17 வரையிலான வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதன்பின்னர் மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக குணமடையும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த நிலையானது, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைவதைக் காட்டுகிறது. அத்துடன், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News