செய்திகள்
கொரோனா வைரஸ்

கர்நாடகாவில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-09-13 08:04 GMT   |   Update On 2020-09-13 08:04 GMT
கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பெங்களூரு:

கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என 60-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதில் எடியூரப்பா, சித்தராமையா உள்பட‌ சிலர் குணம் அடைந்து வீடு திரும்பினர். மேலும் சிலர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மைசூரு மாவட்டம் உன்சூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.மஞ்சுநாத் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மஞ்சுநாத் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுபோல மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனில் சிக்கமாது கடந்த சில தினங்களாக காய்ச்சல், சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆன‌து. இதையடுத்து அனில் சிக்கமாது எம்.எல்.ஏ. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Tags:    

Similar News