செய்திகள்
தேர்வு எழுத வந்த மாணவர்கள் (கோப்பு படம்)

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்- 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்

Published On 2020-09-12 10:09 GMT   |   Update On 2020-09-12 10:09 GMT
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் தேர்வில் 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வுகள், செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி வரை நடைபெற்றன. தேர்வுக்கு 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 6.35 லட்சம் மாணவர் தேர்வில் கலந்துகொண்டனர். அதாவது 2.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

இந்நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக தெலுங்கானா மாநிலத்தில் 8 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். டெல்லியில் 5 பேர், ராஜஸ்தானில் 4 பேர், ஆந்திராவில் 3 பேர், அரியானாவில் 2 பேர், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு மாணவர் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

ஜேஇஇ மெயின் தேர்வில் தாள் 1 மற்றும் தாள் 2-ல் முதல் 2.45 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடிக்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும். ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News