செய்திகள்
ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதல்

ஐதராபாத்: காங்கிரஸ் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி மோதல்- வீடியோ

Published On 2020-09-12 08:18 IST   |   Update On 2020-09-12 08:18:00 IST
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் இரு குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பெருநகர மாநகராட்சி தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி 100 வார்டுகள் வரை பிடிக்கும் என முதல்வர் சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மாநகராட்சியில் அதிக வார்டுகளை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதற்காக தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் தயாரிப்பு பணிகள், வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்கள் குறித்து மாநில தலைவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.


அவ்வகையில், நேற்று மாநில தலைவர் உத்தம் குமார் ரெட்டி முன்னிலையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சியின் இரு தரப்பு தலைவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை மாநில தலைவர் சமாதானம் செய்தார். இந்த கோஷ்டி மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

Similar News