செய்திகள்
எடியூரப்பா

பெங்களூருவை மேலும் வளர்ச்சி அடைய செய்ய நடவடிக்கை: எடியூரப்பா பேச்சு

Published On 2020-09-08 02:45 GMT   |   Update On 2020-09-08 02:45 GMT
பெங்களூருவை மேலும் வளர்ச்சி அடைய செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு மாநகராட்சி சார்பில் கோவிந்த்ராஜ்நகர் மூடலபாளையாவில் மறைந்த சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமியின் மார்பளவு வெண்கல சிலை திறப்பு விழா, போட்டி தேர்வு மையம் தொடக்க விழா மற்றும் நூலகம் திறப்பு விழா உள்ளடக்கிய ஞானசவுதா கட்டிட திறப்பு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அவற்றை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

இந்த ஞானசவுதா கட்டிடம் சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது. இது மாணவ- மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். முதல்-மந்திரியின் நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. இதில் ஒரு ரூபாய் கூட தவறான முறையில் பயன்படுத்தப்படவில்லை. விளையாட்டு மைதானம், யோகா மையம் போன்றவையும் இங்கு உள்ளது. மாநாட்டு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரை மேலும் வளர்ச்சி அடைய செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த பணிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கும். வெளிநாட்டினர் கூட இங்கு வந்து குடியேறுகிறார்கள். சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவை மேலும் முன்னேற்றம் அடைய செய்ய அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
Tags:    

Similar News