செய்திகள்
கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக்

கேரளாவில் புதிய உச்சம் - ஒரே நாளில் நிதிமந்திரி உட்பட 3,082 பேருக்கு கொரோனா

Published On 2020-09-06 21:43 IST   |   Update On 2020-09-06 21:57:00 IST
கேரளாவில் ஒரே நாளில் நிதி மந்திரி தாமஸ் ஐசக் உள்பட 3,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் சமீப வாரங்களாக அதிகரித்து வருகின்றன.  சமீபத்தில் வந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களும் வழக்கம்போல் நடைபெறவில்லை.  ஓணம் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனையும் மந்த நிலையிலேயே இருந்தது.  பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே கொண்டாட்டங்களை முடித்து கொண்டனர்.

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் பற்றி மாநில சுகாதார மந்திரி சைலஜா கூறும்பொழுது, கேரளாவில் ஒரே நாளில் இன்று 3,082 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

2,196 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.  இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 755 ஆக உள்ளது.  22 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்.  அவரது அலுவலகம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.  இதனையடுத்து மந்திரி ஐசக் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

Similar News