செய்திகள்
கோப்புப் படம்

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 165 போலீசார் பலி - அனில் தேஷ்முக்

Published On 2020-09-06 01:25 IST   |   Update On 2020-09-06 01:25:00 IST
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 165 போலீசார் பலியாகி உள்ளனர் என அம்மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
மும்பை :

கொரோனா வைரஸ் பரவல்  இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகளவில் உள்ளது. இங்கு கொரோனா தடுப்பு பணியில் முன்களத்தில் நின்று போராடும் போலீசாரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 165 போலீசார் பலியாகி உள்ளனர் என அம்மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

இதுநாள் வரை மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதில் 1,700 க்கு மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். தற்போது 13 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Similar News